Jul 15, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த திங்கட்கிழமை முதல் எல்.ஆர்.டி 3 ஷா ஆலாம் வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறப்பு
தற்போதைய செய்திகள்

அடுத்த திங்கட்கிழமை முதல் எல்.ஆர்.டி 3 ஷா ஆலாம் வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறப்பு

Share:

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 37.8 கிலோமீட்டர் நீளமுள்ள எல்.ஆர்.டி 3 ஷா ஆலாம் வழித்தடப் போக்குவரத்து, வரும் ஜூன் 29-ஆம் தேதி திங்கட்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாகத் தனது சேவையைத் தொடங்கவுள்ளது.

இதற்கு முன்னதாக, ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இம்மையத்தின் திறப்பு விழாவை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைப்பார் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

பண்டார் உத்தாமா முதல் கிள்ளான், ஜோஹான் செத்தியா வரை இணைக்கும் இந்த புதிய வழித்தடத்தில் பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலாம் மற்றும் கிள்ளான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி மொத்தம் 20 நிலையங்கள் செயல்படவுள்ளன. அதேவேளையில், பொதுமக்களின் வசதிக்காகத் டிபிஎஸ் எனப்படும் டெர்மினல் பெர்செபாடு செலாத்தானில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே கிளை அலுவலகம், தினமும் இரவு 10 மணி வரை இயங்கும் என்றும் அமைச்சர் லோக் மேலும் குறிப்பிட்டார்.

Related News