Sep 25, 2026
Thisaigal NewsYouTube
குழந்தை மற்றும் பணிப்பெண்கள் மீதான தாக்குதல் வழக்கு: 5 பேர் குற்றச்சாட்டுகளை மறுப்பு
தற்போதைய செய்திகள்

குழந்தை மற்றும் பணிப்பெண்கள் மீதான தாக்குதல் வழக்கு: 5 பேர் குற்றச்சாட்டுகளை மறுப்பு

Share:

ஜொகூர் பாருவில் குழந்தை மற்றும் இந்தோனேசியப் பணிப்பெண்களைத் தாக்கியது தொடர்பான பல்வேறு தனித்தனி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு திருமணமான தம்பதிகளும், இந்தோனேசியப் பணிப்பெண் ஒருவரும் நீதிமன்றத்தில் தங்களின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

சென்ற ஆண்டு டிசம்பரில் ஒரு வயது குழந்தையைத் தாக்கியதாக 34 வயது பணிப்பெண் யுலியா அர்னிடா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே வேளையில், அதே முகவரியில் இந்தோனேசியப் பணிப்பெண்ணைத் தாக்கியதாக 33 வயது ஃபிர்தாஸ் ஷாஅபான் 33 வயது, நுராஃபிகா நபிலா 30 வயது, ஹிர்ஜிஹாசிக் அபுலாயி 34 வயது, நூர்ஃபரா ஐன்னா ஹஷார், ஆகிய இரு தம்பதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தம்பதிகள் வேறு இரு பணிப்பெண்களைத் தாக்கியது, மிரட்டல் விடுத்தது மற்றும் அவர்களின் கடப்பிதழ்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர்.

Related News