Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில், பேருந்தில் பயணித்த 19 பேர் காயத்திற்கு அளானார்கள்.
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில், பேருந்தில் பயணித்த 19 பேர் காயத்திற்கு அளானார்கள்.

Share:

ஈப்போ,மார்ச் 3 -

ஈப்போ லுமூட் பிளாஸ் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பயண பேருந்து மற்றும் நான்கு சக்கர தோயோத்தோ ஹைலாக் வாகனத்துடன் ஏற்பட்ட சாலை விபத்தினால், பேருந்தில் பயணித்த 19 பேர் காயங்களுக்கு ஆளாகி உள்ளனர்.

இன்று மாலை 5.30 மணியளவில் சங்காட் செர்மின் , அருகில் ஏற்பட்ட இந்த சாலை விபத்தில், பயண பேருந்து கால்வாயில் கவிழ்ந்ததில், பேருந்தில் பயணித்த 19 பேருக்கும் கடும் காயங்கள் ஏற்பட்டு தற்பொழுது மஞ்சோங் ஶ்ரீ பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, விபத்தில் சிக்கியவர்களை மீட்ட பேராக் தீயணைப்பு மீட்புப்பணிக் குழுவின் செயல்ப்பிரிவின் அதிகாரி இணை இயக்குனர் சபொரொட்சி னோர் அகமட் தெரிவித்தார்.

இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் நான்கு சக்கர வண்டியின் ஓட்டுனரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News