Jul 28, 2026
Thisaigal NewsYouTube
தூக்குத் தண்டனையிலிருந்து வாகன ஓட்டுநர் தப்பினார்
தற்போதைய செய்திகள்

தூக்குத் தண்டனையிலிருந்து வாகன ஓட்டுநர் தப்பினார்

Share:

கிள்ளான், மே 04-

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, போதைப்பொருளை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த நிறுவனம் ஒன்றின் வாகன ஓட்டுநரை கிள்ளான் உயர் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை விடுதலை செய்தது.

தன் வசம் methamphetamine வகையை சேர்ந்த போதைப்பொருளை வைத்திருந்ததாக தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் கிள்ளான், தாமான் கிள்ளான்- கை சேர்ந்த ரகு கிருஷணன் என்ற அந்த வாகன ஓட்டுநர் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டில் நியாயமான சந்தேகங்களை எழுப்புவதில் ரகு கிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளதால் அவரை விடுதலை செய்வதாக நீதிபதி அஸ்மி அப்துல்லா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி கிள்ளான், தாமான் கிள்ளான் ஜெயா-வில் 182.1 கிராம் methamphetamine மற்றும் 3.3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்ததாக 44 வயது ரகு கிருஷ்ணன், 1952 ஆம் ஆண்டு அபாயரக போதைப்பொருள் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்