Jul 28, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கும்பல் முறியடிப்பு, கணவன், மனைவி கைது
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கும்பல் முறியடிப்பு, கணவன், மனைவி கைது

Share:

கிள்ளான், மார்ச் 8 -

கிள்ளானில் வாடகை வீடு ஒன்றில் கணவனும், மனைவியும் போதைப்பொருளை பொட்டளமாக கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் சுமார் 60 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ஷா ஹூங் போங் தெரிவித்தார்.

அந்த தம்பதியரின் போதைப்பொருள் நடவடிக்கை குறித்து கிடைக்கப்பெற்ற உளவுத் தகவலைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி பிற்பகல் 2.20 மமணியளவில் அந்த வாடகை வீட்டில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டதாக ஏ.சி.பி ஷா ஹூங் போங் குறிப்பிட்டார்.

30 வயது மதிக்கத்தக்க அந்த தம்பதியர் கைது செய்யப்பட்டது மூலம் இரண்டு பாக்கெட் கஞ்சா, 600 பாக்கெட் ஹேரோயின், 15 பாக்கெட் ஷாபூ என சுமார் ஒரு கிலோ எடை கொண்ட பல வகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இன்று தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஏ.சி.பி ஷா ஹூங் போங் இதனை தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்