Mar 16, 2026
Thisaigal NewsYouTube
கூட்டரசு பிரதேசத்தின் 2024 பொன்விழா கொண்டாட்டம்
தற்போதைய செய்திகள்

கூட்டரசு பிரதேசத்தின் 2024 பொன்விழா கொண்டாட்டம்

Share:

கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவானை உள்ளடக்கிய கூட்டர பிரதேசத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் நாளை பிப்ரவரி முதல் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கிறது.

கூட்டரசு பிரதேசத்தின் பொன்விழா கொண்டாட்டத்தையொட்டி புத்ராஜெயா சதுக்கத்தில் நாளை சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை இரண்டு தினங்களுக்கு பொது மக்களுக்கான சேவையை வழங்கும் நிகழ்வுகளும் நடைபெறவிருப்பதாக கூட்டரசு பிரதேசத்திற்கு பொறுப்பேற்றுள்ள பிரதமர் துறை அமைச்சர் Dr Zaliha Mustafa தெரிவித்துள்ளார்.

கூட்டரசு பிரதேச இலாகாவின் ஒத்துழைப்புடன் புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் அரசாங்கத்தின் பல தரப்பட்ட சேவைகளை மக்கள் ஓரிட சேவை மையத்தில் பெறலாம் என்று அமைச்சர் Dr Zaliha Mustafa குறிப்பிட்டுள்ளார்.

கூட்டரசு பிரதேசம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு விழா காண்பதையொட்டி கடந்த மூன்று வருடங்களாக வழங்கப்பட்டு வரும் இச்சேவைகளை இக்கொண்டாட்ட நிகழ்வில் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் Dr Zaliha Mustafa விளக்கினார்.

Related News