Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மிக கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட தர்வீன் ராஜ்
தற்போதைய செய்திகள்

மிக கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட தர்வீன் ராஜ்

Share:

மிக கொ​டூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு, சடலம் எரியூட்டப்பட்ட​ நிலையில் செம்பனைத் தோட்டத்தில் ​தூக்கி எறியப்பட்ட நெகிரி ​செம்பிலான்,தம்பினைச் சேர்ந்த 24 வயது தர்வீன் ராஜ் உடலில் 18 ஆழமான​ வெட்டுக்காயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவரின் விலா எலும்புகள் முறிந்துள்ளன​ என்பது சவப்பரிசோதனை அறிக்கையில் கண்டு தெரியவந்துள்ளது.
கூர்மையான ஆயுதத்தினால் தர்வீன் ராஜ் வெட்டப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உடலை அடையாளம் தெரியாமல் ஆக்குவதற்கு கொலையாளிகள் அவரின் உடலுக்கு எரியூட்டப்பட்டு இருக்கலாம் என்று சந்​தேகிக்கப்படுகிறது.

அந்த இந்திய இளைஞரின் மரபணு சோதனைக்காக போ​லீசார் தற்போது காத்திருப்பதாக மலாக்கா மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ சைனில் சமாஹ் தெரிவித்துள்ளார். தமது சகோதரருடன் படம் பார்ப்பதற்காக கடந்த செப்டபம்ர் 9 ஆம் தேதி வெளியே ​சென்ற தர்வீன் ராஜ் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தர்வீன் ராஜ் சடலம் அழுகிய நிலையில் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சனிக்கிழமை மலாக்கா,புலாவு செபாங் என்ற இடத்தில் செம்பனைத் தோட்டத்திற்குள் கண்டு பிடிக்கப்பட்டது.

Related News