Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பிப்ரவரி வரை 20,035 சமூக ரொக்கமில்லா பண பரிவர்த்தனைகள்
தற்போதைய செய்திகள்

பிப்ரவரி வரை 20,035 சமூக ரொக்கமில்லா பண பரிவர்த்தனைகள்

Share:

ஜோகூர், மார்ச் 14 -

மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான ம்.சி.ம்.சி கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக ரொக்கமில்லா பண பரிவர்த்தனை திட்டத்தில் கடந்த 2023 தொடங்கி இவ்வாண்டு பிப்ரவரி வரை 20,035 ரொக்கமில்லா பண பரிவர்த்தனை வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் 2,740 வர்த்தகர்களும் வெற்றிகரமாக இத்திடத்தில் தங்களை பதிவு செய்துள்ளதாக தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

கடந்த ஆண்டு மலாக்காவில் அறிமுகம் கண்ட இத்திட்டம் தற்போது ஜோகூர், நெகிரி செம்பிலான் மற்றும் பகாங் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

"2024 ஆம் ஆண்டில், ஜொகூர், நெகிரி செம்பிலான் மற்றும் பகாங் ஆகிய மூன்று மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 61 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்," என்று கூலாய், நில மேம்பாட்டு வாரியம் (ஃபெல்டா) தைப் அன்டாக்கில் அமைந்துள்ள தேசிய தகவல் பரப்பு மையத்தில் (NaDi) ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஒன்றில் கூறினார்.

சமூக ரொக்கமில்லா பண பரிவர்த்தனை திட்டம் ஜோகூர் மாநில அரசு, ஃபெல்டா ஒத்துழைப்புடன் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும். ஜோகூர் மாநிலத்தில் 17 ஃபெல்டா குடியிருப்பு பகுதிகளில் சமூக ரொக்கமில்லா பண பரிவர்த்தனை திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தியோ குறிப்பிட்டார்.

Related News

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

மலாக்கா: மீன் தோல் எனக் கூறி 83.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுறா துடுப்புகளைக் கடத்த முயன்ற முயற்சி முறியடிப்பு

மலாக்கா: மீன் தோல் எனக் கூறி 83.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுறா துடுப்புகளைக் கடத்த முயன்ற முயற்சி முறியடிப்பு