Aug 13, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா: மீன் தோல் எனக் கூறி 83.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுறா துடுப்புகளைக் கடத்த முயன்ற முயற்சி முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

மலாக்கா: மீன் தோல் எனக் கூறி 83.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுறா துடுப்புகளைக் கடத்த முயன்ற முயற்சி முறியடிப்பு

Share:

தென் அமெரிக்காவில் உள்ள கயானாவில் இருந்து மீன் தோல் எனத் தவறாக அறிக்கை செய்து கடத்த முயன்ற 5,069 கிலோகிராம் எடையுள்ள சுறா துடுப்புகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு 8.36 மில்லியன் ரிங்கிட் ஆகும் என்று மலாக்கா சுங்கத்துறை இயக்குநர் ரோஸ்லான் யூசோப் தெரிவித்தார்.

மலாக்கா சுங்கத்துறை அமலாக்கப் பிரிவு மற்றும் தலைமையகத்தின் போதைப்பொருள் பிரிவு ஆகியவை இணைந்து கிள்ளான் துறைமுகத்தில் உள்ள ஒரு கொள்கலனில் கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று இந்தச் சோதனையை மேற்கொண்டன. மீன் தோல் எனக் கூறப்பட்ட சரக்கு உண்மையில் சுறா துடுப்புகள் என்பதும், இதற்கு 10 சதவிகித வரி, மீன்வளத்துறை மற்றும் மாகிஸ் அனுமதிகள் தேவைப்படுவதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்தச் கடத்தல் முயற்சிக்கு மூளையாகச் செயல்பட்ட சிலாங்கூரைச் சார்ந்த இறக்குமதி நிறுவனத்தின் இயக்குநரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சுங்கச் சட்டத்தின் 135(1)(a) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related News

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி