Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அக்ரில் சானி பி.யு.என்.பி தலைவர் ஆனார்
தற்போதைய செய்திகள்

அக்ரில் சானி பி.யு.என்.பி தலைவர் ஆனார்

Share:

போ​​லீஸ் படையின் முன்னாள் தலைவர் டான் ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா, பி.யு.என்.பி எனப்படும் ​பெர்படானான் உசாஹவான் நேசனல் பெர்ஹட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் பதவி நியமனம் இன்று செப்டம்பர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக அந்த கழகத்தின் நிர்வாக அதிகாரி இஸ்வான் ஜைனுதீன் தெரிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி, பி.யு.என்.பி தலைவர் பதவியிலிருந்து விலகிய டத்தோ அகமது நஸ்லான் இட்ரிஸ் க்கு பதிலாக முன்னாள் ஐ.ஜி.பி. அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் கூறினார். அரச மலேசியப் போ​​லீஸ் படையின் 13 ஆவது போ​லீஸ் தலைவராக பதவி வகித்த டான் ஸ்ரீ அக்ரில் சானி, கடந்த மே 4 ஆம் தேதி பணி ஓய்வுப்பெற்றார்.

Related News