Jul 28, 2026
Thisaigal NewsYouTube
லோரி மோதியதில் பெண் போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

லோரி மோதியதில் பெண் போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்

Share:

டூத்தா உலு கெலாங் நெடுஞ்சாலையின் 2.7 கிலோமீட்டரில் ஏற்பட்ட சாலை விபத்தில் பெண் போலீஸ் அதிகாரி உயிரிழந்த வேளையில் மற்றொருவர் படுங்காயங்களுக்கு ஆளாகினார்.

நேற்று மதியம் 12:58 மணியளவில் ஸ்தாப்பாக் அருகிலுள்ள ப்லாசா டோல் பாத்துவிலிருந்து சுங்ஙாய் பெசி செல்லும் வழியில் யமாஹா இகோ சொலாரிஸ் என்கிற மோட்டார் சைக்கிளும் Rigid ரக லோரியும் விபத்துக்குள்ளாகியதாக போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் ஏசிபி சரிஃபுடின் முஹமாட் சாலே தெரிவித்தார்.

31 வயதுடைய போலீஸ் அதிகாரி விபத்தில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் சம்பவ இடத்திலேயே இறந்ததாக கோலாலம்பூர் மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியதாக சரிஃபுடின் முஹமாட் கூறினார்.

அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த 33 வயதான மற்றொரு போலீஸ் அதிகாரியும் பலத்த காயங்களினால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக லோரி ஓட்டுநருக்கு விபத்தில் காயங்கள் எதுவும் ஏற்படாமல் உயிர் தப்பியதாக சரிஃபுடின் முஹமாட் அறிவித்தார்.

Related News