May 22, 2026
Thisaigal NewsYouTube
5 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்தன
தற்போதைய செய்திகள்

5 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்தன

Share:

Jelutong, Kota Emas, Blok 90 -யில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடுத்து எரிந்தன.

நேற்று இரவு 9:44 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து ஜாலான் பேரா தீயணைப்பு நிலையத்திலிருந்து 10 அதிகாரிகள் உட்பட தீயணைப்பு வாகனங்கள் அவ்விடத்திற்கு விரைந்ததாக பினாங்கில் உள்ள மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

தீயில் ஐந்து மோட்டார் சைக்கிள்கள் எரிந்ததுடன் அதில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தீயில் 90 விழுக்காடு மோட்டார் சைக்கிள்கள் பாதிக்கப்பட்டதுடன் Honda EX5 மற்றும் SYM ரக மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே 5 சதவீதம் எரிந்திருப்பதாக அவர் ஓர் அறிக்கையில் இன்று கூறினார்.

Related News