கோலாலம்பூர்,பிப்.2
அலுவலகத்தில் பணியாற்றும் தன்மையில் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பதற்கு முன்வைக்கப்படும் எந்தவொரு பரிந்துரையும் கியூபெக்ஸ் கடுமையாக எதிர்க்கும் என்று அரசாங்கத் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
உள்ளூர் தொழிலாளர் பற்றாக்குறையாக இருக்கிறது என்று சாக்குப் போக்குகள் கூறப்படுவதை கியூபெக்ஸ் இனியும் அனுமதிக்காது.
அந்நியத் தொழிலாளர்கள் நீல நிறக் காலர் வேலைகளுக்கு அனுமதிக்கப்படுமானால் அது உயர் கல்விக்கூடங்கள் வரை படித்து, வேலைக்காக காத்திருக்கும் மலேசியர்களை வெகுவாக பாதிக்கச் செய்து விடும் என்று கியூபெக்ஸின் தலைவர் டத்தோ அட்நான் மாட் தெரிவித்துள்ளார்.








