Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மனைவியை கொலை செய்ததாக லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மனைவியை கொலை செய்ததாக லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

Share:

சிலாங்கூர், ஜூன் 14-

கடந்த வாரம், ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவியை கொலை செய்ததாக லாரி ஓட்டுநர் ஒருவர் கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

31 வயது எஸ் சூர்யா ராஜ் என்ற அந்த லாரி ஓட்டுநர் மாஜிஸ்திரேட் சித்தி ஸுபைதா மாமத் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவர் தலையசைத்தார்.

இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படவிருப்பதால் குற்றச்சாட்டப்பட்டிருந்த அந்த லாரி ஓட்டுநரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறை அல்லது கூடிய பட்சம் 12 பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த ஜூன் 7 ஆம் தேதி காலை 6.30 முதல் 7 மணி வரையில் சிலாங்கூர், பண்டார்ர் பொட்டானிக் -கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் படுக்கையறையில் 28 வயது ஏ கிர்ஷாஷினி என்ற தனது மனைவியை கொலை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு