Dec 2, 2025
Thisaigal NewsYouTube
லோ மேல்முறையீட்டு வழக்கில் ஜுலை 31 இல் விசாரணை
தற்போதைய செய்திகள்

லோ மேல்முறையீட்டு வழக்கில் ஜுலை 31 இல் விசாரணை

Share:

மதம் மாறிய தமது கணவர் எம். நாகேஸ்வரனால் தம்முடைய அனுமதியின்றி தமது மூன்று பிள்ளைகள் மதம் மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி தனித்து வாழும் தாயாரான லோ சியூவ் ஹொங் தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கில விசாரணை தேதிகள் வரும் ஜுலை 31 ஆம் தேதி நிர்ணயிக்கப்படவிருக்கிறது.

இன்று காலையில் புத்ராஜெயாலில் அப்பீல் நீதிமன்ற துணை பதிவதிகாரி மரியாம் ஹசானா ஒத்மான் முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கில் மேல்முறையீட்டிற்கான குறிப்புகள் முறைப்படுத்தப்பட்டன.
தமது மூன்று பிள்ளைகள் ஒரு தலைப்பட்சமாக மதம் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து, அதனை சட்ட ரீதியாக சவால் விடுவதற்கு லோ தொடுத்திருந்த வழக்கு மனுவை கடந்த மே 11 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதின்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தில் இத்தீர்ப்பை எதிர்த்து அப்பீல் நீதிமன்றத்தில் லோ, மேல்முறையீடு செய்துள்ளார்.

இன்றைய வழக்கு விசாரணையில தற்போது உயர் நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வமாக தீர்ப்புக்காக தாங்கள் காத்திருப்பதாக துணை பதிவதிகாரியிடம் தெரியப்படுத்தியுள்ளதாக லோவின் வழக்கறிஞர் ஏ. ஸ்ரீமுருகன் தெரிவித்துள்ளார்.

Related News