Oct 17, 2026
Thisaigal NewsYouTube

மலேசியாவின் கோரிக்கை நிராகரிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியாவின் கோரிக்கை நிராகரிப்பு

கோலாலம்பூர், நவ.9-


ஸ்காட்லாந்து, கிளாஸ்கோ நகரில் 2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் போட்டியை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று மலேசியா விடுத்துள்ள கோரிக்கையை காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி சம்மேளனம் நிராரித்துள்ளது.

பேட்மிண்டன் போட்டியில் பதக்கங்களை வெல்லும் சாத்தியத்தைக்கொண்டுள்ள மலேசியா, அந்த அனைத்துலகப் போட்டியில் பேட்மிண்டன் போட்டி ஓரங்கட்டப்பட்டதை எதிர்த்து செய்து கொண்ட மேல்முறையீட்டை அந்த சம்மேளனம் தள்ளுபடி செய்தது.

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிக்கான செலவினத்தை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக பேட்மிண்டன் உட்பட மேலும் சில போட்டி விளையாட்டுகளை, காமன்வெல்த் சம்மேளனம் நீக்கியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →