Oct 10, 2026
Thisaigal NewsYouTube

6 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
6 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

ஈப்போ, ஜூன்.16-

கடந்த வாரம் திங்கிட்கிழமை கிழக்கு மேற்கு சாலையில் பேரா, கெரிக்கில் உப்சி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பேருந்து விபத்தில் காயமுற்றவர்களில் இன்னும் ஆறு பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

இந்த அறுவரில் இரண்டு மாணவர்கள் ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையிலும், ஒருவர் தைப்பிங் மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதர மூவர், அந்த பேருந்தினால் மோதப்பட்ட பெரோடுவா அல்ஸா காரில் பயணித்தவர்கள் ஆவர். ஒரு பெண்ணும், இரண்டு சிறார்களும் கெடா, பாலிங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக டத்தோ நூர் ஹிசாம் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →