Jun 20, 2026
Thisaigal NewsYouTube
டுங்குன் அருகே கொடூரம்: இரும்புச் சுத்தியலால் பாட்டியைத் தாக்கிய பேரன் கைது
தற்போதைய செய்திகள்

டுங்குன் அருகே கொடூரம்: இரும்புச் சுத்தியலால் பாட்டியைத் தாக்கிய பேரன் கைது

Share:

திரெங்கானு, டுங்குன், கம்பங் கோலா அபாங் பகுதியில், வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தடுத்த 79 வயது பாட்டியை இரும்புச் சுத்தியலால் கொடூரமாகத் தாக்கிய 25 வயது பேரன் போலீஸ் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்துத் டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் நிக் அப் ஹாலிம் நிக் மாட் கூறுகையில், "நேற்று மாலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, சந்தேக நபர் பாட்டியை கீழே தள்ளி, இரும்புச் சுத்தியலால் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி உடனடியாகத் டுங்குன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தற்போது சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்," என்றார்.

கைது செய்யப்பட்டுள்ள அந்தப் பேரனிடம் மனநல நோயாளிக்கான அட்டை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரிடமிருந்த இரும்புச் சுத்தியலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்று நிக் அப் ஹாலிம் தெரிவித்தார்.

Related News

மலேசியாவிற்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு எண்ணெய், எரிவாயு விநியோகம்: ரஷ்ய அதிபர் புதின் வாக்குறுதி: பிரதமர் அன்வார் தகவல்

பொதுப் போக்குவரத்தில் டிஜிட்டல் சுகாதாரப் பிரச்சாரம்: எம்.ஆர்.டி ரயிலில் பயணம் செய்து சுகாதார அமைச்சர் தொடங்கி வைத்தார்

டிஎன்ஜி இ-வாலட்  மூலம் வரம்பற்ற பயண அட்டை: ரேபிட் கேஎல் புதிய அதிரடி அறிமுகம்

உள்நாட்டு ஊடகங்களுக்கு விளம்பர நிதியை அதிகரியுங்கள்: நிறுவனங்களுக்கு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அவசர அழைப்பு

நளினி பத்மநாதனின் நியமனம் மலேசிய ஊடக மன்றத்திற்குப் புதிய தோற்றம்: பிரதமர் அன்வார் நம்பிக்கை

90 லட்சம் மக்கள் பயன்பெறும் எஸ்.டி.ஆர், சாரா திட்டங்கள்: 1,500 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடு