Jun 20, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவிற்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு எண்ணெய், எரிவாயு விநியோகம்: ரஷ்ய அதிபர் புதின் வாக்குறுதி: பிரதமர் அன்வார் தகவல்
தற்போதைய செய்திகள்

மலேசியாவிற்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு எண்ணெய், எரிவாயு விநியோகம்: ரஷ்ய அதிபர் புதின் வாக்குறுதி: பிரதமர் அன்வார் தகவல்

Share:

ரஷ்யா மற்றும் துர்க்மெனிஸ்தான் நாடுகளுடனான வியூக ஒத்துழைப்பு, மலேசியாவின் நீண்டகால எரிசக்தி பாதுகாப்புத் தேவையை வலுப்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று பினாங்கில் நடைபெற்ற செத்தியா ஃபான்டைன்ஸ் தொழில்துறை பூங்காவின் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர்,தாம் அண்மையில் ரஷ்யாவின் கசான் நகருக்குச் சென்றிருந்தபோது, அதிபர் விளாடிமிர் புதின் மலேசியாவிற்கு அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தடையின்றி எண்ணெய், எரிவாயு மற்றும் டீசல் விநியோகம் செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்திற்கு உறுதியளித்துள்ளார்," என்றார்.

மேலும், தங்களின் அண்மைய துர்க்மெனிஸ்தான் பயணத்தின் மூலம் உலகிலேயே மிகப்பெரிய எரிவாயு இருப்பு கொண்ட ஒரு பிராந்தியத்தில் மலேசியாவிற்குப் புதிய அனுமதி கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதியையும் அதிகரிக்க முடியும் என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் சுட்டிக்காட்டினார்.

Related News