Jul 18, 2026
Thisaigal NewsYouTube
டிஎன்ஜி இ-வாலட்  மூலம் வரம்பற்ற பயண அட்டை: ரேபிட் கேஎல் புதிய அதிரடி அறிமுகம்
தற்போதைய செய்திகள்

டிஎன்ஜி இ-வாலட் மூலம் வரம்பற்ற பயண அட்டை: ரேபிட் கேஎல் புதிய அதிரடி அறிமுகம்

Share:

பொதுப் போக்குவரத்துப் பயனாளிகளின் வசதிக்காக, டிஎன்ஜி இ-வாலட் செயலி மூலமாகவே நேரடியாக வாங்கிப் பயன்படுத்தக்கூடிய புதிய டிஜிட்டல் ரேபிட் மாதாந்திர பயண அட்டையை ரேபிட் கேஎல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் பயனர்கள் இனி எல்ஆர்டி , எம்ஆர்டி, மோனோரயில், சன்வே பிஆர்டி மற்றும் ரேபிட் கேஎல் பேருந்துகளில் 30 நாட்களுக்கு வரம்பற்ற முறையில் பயணம் செய்ய முடியும்.

150 ரிங்கிட் விலையிலான இந்த டிஜிட்டல் அட்டையைப் பெற, பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் என்எஃப்சி தொழில்நுட்ப வசதி இருப்பதோடு, டிஎன்ஜி செயலி அண்மையப் பதிப்பிற்குப் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதேவேளையில், வழக்கமான முறையில் முகப்பிடஙக்ளுக்கு சென்று பயண அட்டையை வாங்க விரும்பும் பயணிகளுக்காக, நிலையங்களில் உள்ள முகப்பிட சேவைகளும் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என ரேபிட் கேஎல் தெரிவித்துள்ளது.

Related News