Jun 20, 2026
Thisaigal NewsYouTube
உள்நாட்டு ஊடகங்களுக்கு விளம்பர நிதியை அதிகரியுங்கள்: நிறுவனங்களுக்கு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அவசர அழைப்பு
தற்போதைய செய்திகள்

உள்நாட்டு ஊடகங்களுக்கு விளம்பர நிதியை அதிகரியுங்கள்: நிறுவனங்களுக்கு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அவசர அழைப்பு

Share:

உள்நாட்டு ஊடக நிறுவனங்களின் விளம்பர வருவாய் பாதியாகக் குறைந்துள்ளதால், அரசு சாரா மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களான GLC, தங்களின் விளம்பரச் செலவினங்களை உள்நாட்டு ஊடகங்களுக்கு அதிகம் ஒதுக்க வேண்டும் என்று தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் வலியுறுத்தியுள்ளார்.

பினாங்கில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு 'தேசிய பத்திரிகையாளர் தினமான ஹவானா கொண்டாட்டத்தில் பேசிய டத்தோ ஃபஹ்மி , "உள்நாட்டு ஊடகங்களின் வருடாந்திர விளம்பர வருவாய் 450 கோடி ரிங்கிட்டிலிருந்து 200 கோடி ரிங்கிட்டாகச் சரிந்துள்ளது ஊடகத்துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது," என்றார்.

மேலும், ஊடகத்துறையை வலுப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து பாடுபட்டு வரும் வேளையில், 'ஊடக புத்தாக்க நிதிக்கு' டெலிகாம் மலேசியா நிறுவனம், 5 லட்சம் ரிங்கிட்டை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் அறிவித்தார்.

இந்நிகழ்வில், மலேசிய ஊடகத்துறைக்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக மூத்த ஊடகவியலாளர் டத்தோ சுஹைமி சுலைமானுக்கு 'ஹவானா விருது 2026' வழங்கப்பட்ட வேளையில், காலமான பெர்னாமா வானொலியின் முன்னாள் தலைவர் அஸ்லான் இத்ரிஸுக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்படும் 'ஹவானா சிறப்பு விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Related News