ஜப்பானுக்கு மூன்று யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டதில் விதிமீறல் நடந்துள்ளதாகக் கூறி, அதுகுறித்து விசாரிக்க புக்கிட் அமான் சிறப்புப் பணிக்குழுவை அமைக்க வேண்டும் என 'பெக்கா' சுற்றுச்சூழல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தைப்பிங் விலங்கியல் பூங்காவிலிருந்து ஒசாகா மிருகக்காட்சிசாலைக்கு தாரா, அமோய், கெலாட் ஆகிய மூன்று யானைகள் கொண்டு செல்லப்பட்டதில் ஏற்றுமதி அனுமதிகள் மற்றும் கால்நடை மருத்துவத் துறை சான்றிதழ்களில் பெரும் முரண்பாடுகள் இருப்பதாக பெக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
இதில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நடைமுறை மீறல்கள் நடந்துள்ளதாகக் கூறி, போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயிலிடம் அந்த அமைப்பு மனு அளித்துள்ளது. வணிகக் குற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களில் அனுபவமுள்ள அதிகாரிகளைக் கொண்டு இந்தச் அனைத்துலக பரிமாற்றம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என பெக்கா தலைவர் ராஜேஷ் நாகராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.








