Jul 16, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமனறத்தில் முகைதீனின் இடம் மாற்றம்
தற்போதைய செய்திகள்

நாடாளுமனறத்தில் முகைதீனின் இடம் மாற்றம்

Share:

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ முஹைதீன் யாசினின் நாடாளுமன்ற இருக்கை இடம் புளோக் இ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய இருக்கைகள் பட்டியலில் இந்த மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்குமுன் எதிர்க்கட்சித் தலைவருக்கு அருகில் அமர்ந்திருந்த முஹைதீன் யாசின், தற்போது பின்வரிசைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அதேவேளையில், எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீனின் இருப்பிடம் எவ்வித மாற்றமுமின்றி முன்னிலையிலேயே நீடிக்கிறது.

அவருக்கு அருகில் கெமாமான் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் சம்சூரியும், மாராங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹாடி அவாங்கும் அமரவுள்ளனர். 15-ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டம் ஜூன் 22 முதல் ஜூலை 16 வரை 16 நாட்களுக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News