Jul 27, 2026
Thisaigal NewsYouTube
முதியவரின் உடல் கடைக்கு பின்னால் கண்டெடுக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

முதியவரின் உடல் கடைக்கு பின்னால் கண்டெடுக்கப்பட்டது

Share:

ஜொகூர் பாரு, ஏப்ரல் 02 -

ஜொகூர் பாரு, ஜாலான் செராம்ப்பாங் -கில் உள்ள கடைகளுக்குப் பின்னால் 67 வயதுடைய முதியவர் ஒருவர் சுயநினைவின்றி உயிரிழந்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தான் சியூவ் லியாங்-கிற்கு எதிராக எந்தவொரு குற்றச்செயலும் பதிவாகவில்லை என்று ஜொகூர் பாரு போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் ரவூப் செலமாட் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட முதியவரை கொலை புரிந்த சம்பவத்திற்கான எந்தவொரு அறிகுறிகளும் இல்லாத நிலையில் இது ஒரு திடீர் மரணமே என்று சவப் பரிசோதனையின் வாயிலாக கண்டறியப்பட்டதாக ரவூப் செலமாட் கூறினார்.

அந்த முதியவரின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு முன்பாக கடந்த ஐந்து நாட்களாக அவர் அவ்வளாகத்தில் சுற்றி வந்ததாக தெரியவந்துள்ளது.

நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் அவ்விடத்திற்கு சென்றதாகவும் மேல் நடவடிக்கைகளுக்காக அம்முதியவரின் உடல் சுல்தானாஹ் அமிநாஹ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ரவூப் செலமாட் மேலும் விளக்கினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்