Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கேளிக்கை மையத்தில் கொலை, நால்வர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

கேளிக்கை மையத்தில் கொலை, நால்வர் மீது குற்றச்சாட்டு

Share:

ஜோகூர்பாரு, Jalan Dato Abdullah- வில் உள்ள இரவு கேளிக்கை மையத்தில் 24 வயதுடைய தங்களின் சகாவை கொலை செய்ததாக நான்கு நபர்கள், ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

28 க்கும் 48 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும் மாஜிஸ்திரேட் Hudayatul Syuhada Shamsudin முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளில் அந்த Night Club-பின் அலுவலகத்தில் 24 வயது Hah Chun Fai என்பவரை கொலை செய்ததாக அந்த நால்வர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

Related News