May 22, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணை கைப்பேசியில் ஆபாசப் படம் எடுத்த இந்தோனேசிய பிரஜைக்கு வெ.4,000 அபராதம்
தற்போதைய செய்திகள்

பெண்ணை கைப்பேசியில் ஆபாசப் படம் எடுத்த இந்தோனேசிய பிரஜைக்கு வெ.4,000 அபராதம்

Share:

மலாக்கா, ஜூன் 06-

ஒரு பிஸ்கட் கடையின் கழிப்பறையை பயன்படுத்திய பெண்ணை கைப்பேசியில் ஆபாசப் படம் எடுத்த குற்றத்திற்காக இந்தோனேசிய துப்புரவுத் தொழிலாளி ஒருவருக்கு அயர் கெரோஹ் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 4,000 வெள்ளி அபராதம் விதித்துள்ளது.

27 வயது ஃபெரி என்ற அந்த துப்புரவுத் தொழிலாளி மாஜிஸ்திரேட் நபிலா நிஜாம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு அத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 509 ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 2 ஆம் தேதி மாலை 4.15 மணியளவில் மலாக்கா, லோரோங் ஹாங் ஜெபாட் -டில் உள்ள ஒரு பிஸ்கட் கடையின் கழிப்பறையில் 24 வயது பெண் ஒருவரிடம் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News