Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பிரதமருக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, பெர்சாத்து விடமிருந்து இன்னும் நோட்டிஸ் ஏதும் பெறப்படவில்லை
தற்போதைய செய்திகள்

பிரதமருக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, பெர்சாத்து விடமிருந்து இன்னும் நோட்டிஸ் ஏதும் பெறப்படவில்லை

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 11-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவை வழங்கியதற்காக, பெர்சாத்து கட்சியிடமிருந்து தாம் இதுவரையில் எந்தவொரு நோட்டீஸையும் பெறவில்லை என புக்கிட் கன்த்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சுயேட் அபு ஹஸ்ஸின் ஹாபிஸ் சுயேட் அப்துல் பாசல் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நோட்டீஸ் கிடைக்காத வரையில், தமது தொகுதியை காலி செய்வது தொடர்பில், ஏதும் கருத்துரைக்க போவதில்லை என பெரித்தா ஹரியானிடம் அவர் கூறினார்.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவு தலைவர் டத்தோரசாலி இட்ரிஸ்-சிடம் வினவப்பட்ட போது, அவர் அனைத்து தரப்பினரும் பொறுமைக் காக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இதற்கு முன்பு, பிரதமருக்கு ஆதரவளித்திருந்த பெர்சாத்துவின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உட்பட ஒரு சட்டமன்ற உறுப்பினரும் தகுதியை இழக்காமலிருக்க, அவர்களின் நிலைப்பாட்டை மீண்டும் தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

கட்சியின் நிலைப்பாட்டை மீறி, எதிர்தரப்பினருக்கு ஆதரவளிக்கும் மக்கள் பிரதிநிதிகள் கட்சியிலிருந்து உறுப்பினர் தகுதியை உடனடியாக இழக்க செய்யும் வகையில், பெர்சாத்துவின் சட்டத்திருத்தத்தை தேசிய சங்கப் பதிவகம் அங்கீகரித்ததை அடுத்து, ரசாலி இட்ரிஸ் அக்கூற்றை முன்வைத்திருந்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்