Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பாரிசான் நேஷனல் முன்னாள் வேட்பாளர் மீது 77 குற்றச்சசாட்டுகள்
தற்போதைய செய்திகள்

பாரிசான் நேஷனல் முன்னாள் வேட்பாளர் மீது 77 குற்றச்சசாட்டுகள்

Share:

கடந்த ஆண்டு நடைபெற்ற 15 ஆவது பொதுத் தேர்தலில் பேரா, ஜெலாபாங் சட்டமன்றத் தொகுதியில் பாரிசான் நேஷனல் வேட்பாளராக போட்டியிட்ட பெண்மணி ஒருவர் மீது 77 மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மக்கள் சக்தி கட்சி வேட்பாளராக போட்டியிட்ட 47 வயது ஹமிடா முகமட் என்ற அந்த பெண்மணி மூன்று லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள நிலம் மற்றும் வீடு விற்பனை தொடர்பாக மக்களை ஏமாற்ற முற்பட்டதாக 77 குற்றச்சாட்டுகள் தைப்பிங், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டன.

குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அந்தப் பெண்மணி, தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளார். தைப்பிங் மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் மகளிர் பிரிவுத் தலைவியான ஹமிடாவை இரு நபர்களின் உத்தரவாதத்தின் பேரில் 24 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

Related News