Dec 4, 2025
Thisaigal NewsYouTube
நீதிமன்ற காவலாளிக்கு 6 மாத சிறைத் தண்டனை
தற்போதைய செய்திகள்

நீதிமன்ற காவலாளிக்கு 6 மாத சிறைத் தண்டனை

Share:

தாம் காவல் பணியில் ஈடுபட்டிருந்த நீதிமன்ற கட்டடத்தின் பெட்டகத்தை உடைத்து பணத்தை களவாடிய குற்றத்திற்காக காவலாளி ஒருவருக்கு மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 6 மாத சிறை மற்றும் 3,500 வெள்ளி அபராதம் விதித்தது.

25 வயதுடைய பி.போல் அகிலன் என்ற அந்த பாதுகாவலர் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் மலாக்கா மாநில நீதிமன்ற கட்டட வளாகத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றதில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற பெட்டகத்திலிருந்து 800 வெள்ளி ரொக்கத்தை அவர் திருடியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. மது பானம் வாங்குவதற்கு பணம் இல்லை என்ற காரணத்தினால் தாம் பணியாற்றிய நீதிமன்ற கட்டத்திலேயே அந்த நபர் கன்னம் வைத்ததாக இதற்கு முன்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Related News