பாசீர் கூடாங், நவம்பர்.20-
தாம் செலுத்திய லோரியின் டயர் வெடித்து, லோரி கவிழ்ந்ததில் இருக்கையிலிருந்து தூக்கி வீசப்பட்ட முதியவர் ஒருவர் கடும் காயங்களுடன் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் இன்று மதியம் 12.20 மணியளவில் ஜோகூர், பாசீர் கூடாங் நெடுஞ்சாலையின் 27 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
இதில் லோரியைச் செலுத்திய உள்ளூரைச் சேர்ந்த 69 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமுற்றதாக போலீசார் அடையாளம் கூறினார்.








