தமது வீட்டின் முன் புறம் உள்ள ஒருவர்த்தக மையத்தில் காரை நிறுத்தி மிக வேகமாக பாடல் இசையை போட்டு, கும்மாளம் அடித்துக்கொண்டு இருந்த நபர்களை பாடலின் சத்தத்தை குறைக்க சொன்ன நபர் , காரினால் மோதப்பட்டு கொல்லப்பட்டார்.
சம்பந்தப்பட்ட கும்பல் நடத்திய இந்த அராஜக செயல் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மலாக்கா, Jalan Pokok Mangga, Kampung Padang, Baru 3, பிளாஸா பண்டான் மாலிம், வளாகத்தில் நிகழ்ந்தது. காரினால் மோதப்பட்டு சுமார் 20 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட 57 வயது நபர், கடுமையான காயங்களுடன் மலாக்கா மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.
எனினும் தலையில் ஏற்பட்ட கடும் காயத்தினால் அவர் அதிகாலை 2.45 மணியளவில் உயிரிழந்ததாக அவரின் மகன் தெரிவித்துள்ளார்.
இந்த அராஜக செயலை நடத்திய நபர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kerana tegur bunyi bising, bapa maut dirempuh pemandu mabuk








