மது போதையில் வாகனத்தை செலுத்தி, போலீஸ்காரர் ஒருவருக்கு மரணம் விளைவித்தது, மற்றொருவருக்கு காயத்தை ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் வாகனமோட்டி ஒருவரின் விடுதலையை புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.
என். மோகன் ராவ் என்ற அந்த வாகனமோட்டியை விடுதலை செய்திருக்கும் உயர்நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு தங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை சரியாக கவனிக்கவில்லை என்று பிராசிகியுஷன் தரப்பு முன்வைத்த வாதத்தை மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு நிராகரித்தது.
இந்த கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான அவசியத்தை வலியுறுத்துவதற்கு கூறப்பட்டுள்ள காரணங்கள் வலுவாக இல்லை என்பதால் மோகன் ராவ் விடுதலையை நிலைநிறுத்துவதாக அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் செமெந்தானில் 25 வயதுடைய போலீஸ்காருக்கு மரணம் விளைவித்ததுடன் அவருடன் இருந்த 23 வயதுடைய மற்றொரு போலீஸ்காருக்கு காயம் விளைவித்த குற்றத்திற்காக மோகன் ராவிற்கு 4 ஆண்டு சிறையும் 15 ஆயிர வெள்ளி அபராதமும் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்தது.
எனினும், இத்தீர்ப்பு உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


