Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மலேசிய மருத்துவர் சங்கத்தின் தலைவராக டாக்டர் அஜிசான் நியமனம்
தற்போதைய செய்திகள்

மலேசிய மருத்துவர் சங்கத்தின் தலைவராக டாக்டர் அஜிசான் நியமனம்

Share:

மலேசிய மருத்துவர் சங்கமான எம்.எம்.ஏ வின் புதிய தலைவராக டாக்டர் அஜிசான் அப்துல் அஜீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவர் சங்கத்தின் தலைவராக இதுநாள் வரை சேவையாற்றி வந்த டாக்டர் முருக ராஜ் ராஜ்துரையின் பதவி தவணைக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக டாக்டர் அஜிசான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1986 ஆம் ஆண்டு மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் தமது மருத்துவப் பட்டப்பிடிப்பை முடித்த டாக்டர் அஜிசான், அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 35 ஆண்டு காலமாக மருத்துவராக சேவையாற்றி வருகிறார். எம்.எம்.ஏ தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பது மூலம் மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவ அதிகாரிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதாக டாக்டர் அஜிசான் உறுதிப் பூண்டுள்ளார்.

Related News