Jul 18, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்
தற்போதைய செய்திகள்

தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்

Share:

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோன்னின் மூத்த மகள் பஜ்ரகிதியாபா நரேந்திரா தேவ்யாவதி, நேற்று தமது 47-வது வயதில் காலமானார்.

கடந்த நான்கு ஆண்டுகளாகப் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் கோமா நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த அவர், நேற்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்ததாக தாய்லாந்து அரண்மணை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"இளவரசி பா" என அன்புடன் அழைக்கப்பட்ட பஜ்ரகிதியாபா, கடந்த 1978-ஆம் ஆண்டு, டிசம்பர் 7-ஆம் தேதி அப்போது பட்டத்து இளவரசராக இருந்த வஜிரலோங்கோன் மற்றும் அவரது முதல் மனைவி சோம்சாவாலி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.

அவரது மறைவு தாய்லாந்து அரச குடும்பத்தினருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News