மாது ஒருவருக்கு Instagram செயலி வாயிலாக ஆபாச பட வீடியோவை அனுப்பிய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு ரவுப் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
Muhaimi Nabil Muatnan என்ற 35 வயதுடைய அந்த ஆடவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி காலை 10.47 மணியளவில் ரவூப் அருகில் கோல லிப்பிஸில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் 1998 ஆம் ஆண்டு தொடர்புத்துறை மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றஞ்சாட்டப்பட்டார்.








