Mar 16, 2026
Thisaigal NewsYouTube
பாலர் பள்ளியின் புதிய பாடத்திட்டத்தை கல்வி அமைச்சு ஆராயும்
தற்போதைய செய்திகள்

பாலர் பள்ளியின் புதிய பாடத்திட்டத்தை கல்வி அமைச்சு ஆராயும்

Share:

மலேசியக் கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பாலர் பள்ளியின் திய பாடத்திட்டம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன் இறுதி செய்யப்படும் கட்டத்தில் நிலையில் உள்ளது என துணைக் கல்வி அமைச்சர் வொங் கா வோ தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து கடந்த வாரம் அமைச்சரவை முடிவு செய்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாடத்திட்டம் குறித்த அனைத்து விவகாரங்களையும் கல்வி அமைச்சின் பாலர் பள்ளி செயற்குழு மிக நுணுக்கமாக ஆராய்ந்து முடிவு செய்யும். அவ்வாறு புதுப்பிக்கப்பட்டப் பாடத்திட்டம் அரெஅசாங்கப் பாலர் பள்ளிகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

Related News