Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கைக்குழந்தையை கொலை செய்ததாக பாதுகாவலர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

கைக்குழந்தையை கொலை செய்ததாக பாதுகாவலர் மீது குற்றச்சாட்டு

Share:

15 மாத ஆண் குழந்தையை கொலை செய்ததாக பாதுகாவலர் ஒருவர் பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

எஸ். நாகேந்திரன் என்று அந்த நபர், மாஜிஸ்திரேட் நூர் ஃபாடின் முகமது ஃபரித் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

நாகேந்திரன், கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாலை 4.50 மணியளவில் பட்டர்வொர்த், பங்சாபுரி அம்பாங் ஜஜார் ரில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மரணத் தண்டனை அல்லது குறைந்த பட்சம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் நாகேந்திரன் கொலை குற்றச்சாட்டை நோக்கியுள்ளார்.

இவ்வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள நாகேந்திரனிடம் எந்தவொரு வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

Related News