நெகிரி செம்பிலான்,தம்பினைச் சேர்ந்த 24 வயது ஆர். தர்வீன் ராஜ் மிக கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு சடலத்தை எரித்த கோரக் கொலை, 4 ஆயிரம் வெள்ளியை பறிக்கும் நோக்கில் நடந்த சம்பவமா ? என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
ஏழு நாட்களாக காணாமல் போன நிலையில் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சனிக்கிழமை மலாக்கா, புலாவு செபாங்கில் ஒரு செம்பனைத் தோட்டத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் தர்வீன் ராஜ் உடல் மீட்கப்பட்டது. நண்பர்களின் தொடர்பே இல்லாத தமது மகனுக்கு நேர்ந்த கதி குறித்து கண்ணீர் விட்ட அவரின் தாயார் கே. பத்மா? 4 ஆயிரம் வெள்ளியை தமது மகனிடமிருந்து பறிப்பதற்காக நடந்த கொலையாக இருக்குமா? என்று சந்தேகிக்கிறார்.சிங்கப்பூருக்கு வேலை தேடி செல்வதற்கு கையில் போதுமான பணம் வேண்டும் என்பதற்காக தம்முடைய யமாஹா 125 Z ரக மோட்டார் சைக்கிளை விற்றது மூலம் கிடைத்த 4 ஆயிரம் வெள்ளியை தமது மகன் தர்வீன் ராஜ் வைத்து இருந்தார் என்றும் அந்தப் பணத்தை இலக்காக கொண்டு அவர் கடத்தப்பட்டாரா? என்றும் 55 வயது பத்மா சந்தேகிக்கிறார்.இதில் மூன்று நபர்களை தாம் சந்தேகிப்பபதாகவும் அவர்களில் ஒருவர்,தங்களின் தாமானில் இருப்பதாகவும் கொஸ்மொ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பத்மா தெரிவித்துள்ளார்.







