Jul 28, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது
தற்போதைய செய்திகள்

விசாரணை அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது

Share:

கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி லுமூட்டில் அரச மலேசிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் 10 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நாளை வியாழக்கிழமை பூர்வாங்க விசாரணை அறிக்கை வெளியிடப்படும் என்று அரசாங்கப் பேச்சாளரும், ஒற்றுமைத்துறை அமைச்சருமான ஃபாமி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் இதனை தெரிவித்துள்ளதாக ஃபாமி ஃபட்சில் குறிப்பிட்டார்.

இவ்விபத்து தொடர்பாக தொடக்க கட்ட விசாரணையின் உள்ளடக்க அம்சங்களின் சிலவற்றை தற்காப்பு அமைச்சர் கலீத் நோர்டின் அமைச்சரவைக்கு விளக்கம் தந்ததாக அவர் குறிப்பிட்டார்.

லுமூட் அரச மலேசிய கடற்படைத்தளத்தில் 90 ஆம் ஆண்டு நிறைவு நாளையொட்டிய நடைபெற்ற ஒத்திகை நிகழ்வில் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டு விழுந்த சம்பவத்தில் சித்தியவானை சேர்ந்தலெப்டினன்ட் சிவசுதன் தஞ்சப்பன் உட்பட பத்து வீரர்கள் உயிரிழந்தனர்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்