Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ரவாங் அருகில் கோர விபத்து  இருவர் கருகி மாண்டனர்
தற்போதைய செய்திகள்

ரவாங் அருகில் கோர விபத்து இருவர் கருகி மாண்டனர்

Share:

ரவாங் அருகில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் இருவர் கருகி மாண்டனர். இதில் ஒரு கொண்டெய்னர் லோரியும், காரும் எதிரும் புதிருமாக மோதி, ​தீப்பிடித்துக்கொண்டதில் காரில் பயணித்த 26 வயத ஆடவரும், 23 வயது பெண்ணும் கருகி மாண்டதாக சிலாங்கூர் மாநில ​தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்ஹ்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

ரவாங், ஜாலான் குவாலா காரிங் கில் அதிகாலை 3.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தி​ல் காரின் இடிப்பாடுகளில் சிக்கி​க்கொண்ட இருவரின் கருகிய உடல்களை மீட்பதற்கு ​தீயணைப்பு, ​மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தினர்.

இதில் ஹொன்டா சிட்டி ரக கார் 70 விழுக்காடு எரிந்த நிலையில் லோரி 50​ விழுக்காடு சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

லோரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர். இருவரின் கருகிய உடல்களும் செலாயாங் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Related News