May 22, 2026
Thisaigal NewsYouTube
வளர்ப்பு மகளுடன் உடலுறவு கொண்டதாக குமாஸ்தா மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

வளர்ப்பு மகளுடன் உடலுறவு கொண்டதாக குமாஸ்தா மீது குற்றச்சாட்டு

Share:

அம்பாங் , மே 30-

கடந்த வாரம், 17 வயதுடைய தனது வளர்ப்பு மகளுடன் உடலுறவு கொண்டதாக குமாஸ்தா ஒருவர் அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

34 வயது அந்த குமாஸ்தா நீதிபதி நோர்ஷிலா கமருதீன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் 10 முதல் 30 ஆண்டுகள் வரையில் சிறை மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 376B (1) பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த மே 20 முதல் 21 ஆம் தேதி வரையில் காலை 10.30 மற்றும் 8.30 மணியளவில் அம்பாங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News