Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஓன்லைன் மோசடியில் 44 பேர் கைது
தற்போதைய செய்திகள்

ஓன்லைன் மோசடியில் 44 பேர் கைது

Share:

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஓன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் போ​லீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் இந்த 44 பேரும் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக டாங் வா​ங்கி மாவட்ட போ​லீஸ் தலைவர் அசாரி அபு சாமா தெரிவித்தார்.

20க்கும் 38 க்கும் உட்பட்ட வயதுடைய 15 ஆடவர்களும் 9 பெண்களும் முதலாவது நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட வேளையில் எஞ்சியுள்ளவர்கள் இரண்டாவது நடவடிக்கை​யில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த கைது நடவடிககையின் மூலம் 33 கைப்பேசிகள், 19 மடிக்கணினிகள் உட்பட ஓன்லைன் மோசடிக்கு அவர்கள் பயன்படுத்திய இதரப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News