Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஐநா மாநாட்டில் மலேசியா நிச்சயம் பங்கேற்கும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஐநா மாநாட்டில் மலேசியா நிச்சயம் பங்கேற்கும்

கோலாலம்பூர், ஜூன்.13-

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஐநா. மாநாட்டில் மலேசியா நிச்சயம் பங்கேற்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மலேசியாவிற்கு எதிராக அமெரிக்கா அழுத்தம் கொடுக்கலாம் என்று கூறப்பட்டாலும், மலேசியா தனது பிரநிதிகளை மாநாட்டிற்கு நிச்சயம் அனுப்பி வைக்கும் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

பாலஸ்தீன மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தனது ஆணித்தரமானக் கருத்துகளை உரக்கக் கூறுவதில் மாநாட்டில் பங்கேற்கக்கூடிய நாடுகளுக்கு முழு உரிமையிருப்பதையும் பிரதமர் விளக்கினார்.

குறிப்பாக பாலஸ்தீனம் மற்றும் காஸா மக்களுக்கு நீதி கிடைப்பது தொடர்பான விஷயங்களில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை ஒவ்வொரு நாட்டிற்கும் உண்டு. இதுவே மலேசியாவின் நிலைப்பாடாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஐநா மாநாட்டில் மலேசியா நிச்சயம் பங்கேற்கும் | Thisaigal News