Sep 28, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்துறையினர் கடமையைச் செய்யவிடாமல் தடுத்த 8 பேர் கைது: 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை
தற்போதைய செய்திகள்

போலீஸ்துறையினர் கடமையைச் செய்யவிடாமல் தடுத்த 8 பேர் கைது: 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை

Share:

பினாங்கு, ஜாலான் சுங்காய் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், போலீஸ்துறையினருடன் மோதலில் ஈடுபட்ட 8 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டு, மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

28 முதல் 38 வயதுக்குட்பட்ட இந்த நபர்கள் மீது கலவரம் செய்தல் மற்றும் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு சுமார் 9.50 மணியளவில், சந்தேகத்திற்கிடமான ஒருவரைத் துரத்திச் சென்ற நான்கு போலீஸ் அதிகாரிகளுடன் அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மூன்று போலீஸாருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரோசாக் முகமட், "இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்" எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். மேலும், இது போன்ற செயல்கள் தேவையற்ற குழப்பத்தை விளைவித்து போலீஸ்துறையினரின் விசாரணையைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்