May 22, 2026
Thisaigal NewsYouTube
ட்ரெலர் லோரியுடன் விபத்து; விரைவு பேருந்தின் ஓட்டுநர் உள்பட ஐவர் காயமடைந்தனர்.
தற்போதைய செய்திகள்

ட்ரெலர் லோரியுடன் விபத்து; விரைவு பேருந்தின் ஓட்டுநர் உள்பட ஐவர் காயமடைந்தனர்.

Share:

ஈப்போ, மே 31-

ட்ரெலர் லோரி - விரைவு பேருந்து இடையிலான சாலை விபத்தில் பேருந்து ஓட்டுநரும் அதில் பயணித்த 4 பயணிகளும் காயங்களுக்கு இலக்காகினர்.

இன்று காலையில், தெற்கு நோக்கி செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 290ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த அந்த விபத்து குறித்து காலை மணி 5.16 அளவில் தகவலை பெற்ற சிம்பாங் புலாய் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தொடக்கக்கட்ட விசாரணையில், ஒரு கைக்குழந்தை, 3 சிறார்கள் உள்பட 25 பயணிகளுடன் வந்திருந்த விரைவு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, ட்ரெலர் லோரியை பின்னாளிலிருந்து மோதியுள்ளது தெரிய வந்துள்ளது.

அதில், பேருந்து ஓட்டுநர் சிக்குண்ட நிலையில், தீயணைப்பு மீட்பு படையினர் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, ஓட்டுநரை மீட்டு முதலுதவி சிகிச்சையை வழங்கினர்.

காயமடைந்த பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட வேளை, எஞ்சிய பயணிகள் வேறு விரைவு பேருந்தின் வழி, அவரவர் இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

Related News