சிலாங்கூர் சட்டமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய மாநில அரசு தேர்வு செய்யப்படும் வரையில் மாநிலத்தை காபந்து அரசாங்கம் வழிநடத்தும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.
சிலாங்கூர் சட்டமன்றத்தை கலைப்பதற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடீன் இட்ரீஸ், கடந்த திங்கட்கிழமை அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து 14 ஆவது சட்டமன்றத்தை சபா நாயர் ஙா சியூ லிம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக கலைத்ததாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் தேர்வு செய்யப்படும் வரையில் சிலாங்கூர் மாநில நிர்வாகம் தங்குதடையின்றி நடைபெறுவதை காபந்து அரசாங்கம் எல்லா நிலைகளிலும் உறுதிசெய்யும் என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

Related News

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!


