Sep 25, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

Share:

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்கும் நோக்கில், புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறையை இலக்கவியல் அமைச்சு அதிகாரப்பூர்வமாக மலேசிய நாடாளுமன்றத்திடம் இன்று ஒப்படைத்துள்ளது.

இதன் ஒப்படைப்பு விழாவை இலக்கவியல் அமைச்சர் சிங் டியோ முன்னின்று நடத்தினார். 'கோவ்டெக் மலேசியா' பிரிவின் தொழில்நுட்பப் பங்களிப்பில் உருவான இப்புதிய முறை, பாரம்பரிய பிடிஎஃப் ஆவணங்களுக்குப் பதிலாக, அதிவேகத் தேடல், சொல் பகுப்பாய்வு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் கொண்டு தகவல்களை வடிகட்டும் வசதிகளைக் கொண்டுள்ளது என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

நாடாமன்ற கட்டட வளாகத்தில் திறன்மிகு 'ஹென்செர்ட்' முறையை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது கோபிந்த் சிங் இதனை தெரிவித்தார்.

மக்களாட்சித் தன்மையையும், வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இத்திட்டம், '2030 செயற்கை நுண்ணறிவு நாடு' இலக்கை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாகும் என்று கோபிந்த சிங் வர்ணித்தார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற சபா நாயகர் Tan Sri Johari Abdul மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related News

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்