Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சிமெண்ட் லோரியுடன் விபத்துக்குள்ளாகியதில் இரு உடன்பிறப்புகள் மரணம்
தற்போதைய செய்திகள்

சிமெண்ட் லோரியுடன் விபத்துக்குள்ளாகியதில் இரு உடன்பிறப்புகள் மரணம்

Share:

சரவாக், ஏப்ரல் 16-

சரவாக், ஸ்ரீ அமான், சுடும்பன்-னில் நோன்பு பெருநாளை கொண்டாடி வீடு திரும்பும் வேளையில் இரு உடன்பிறப்புகள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அச்சம்பவத்தின் போது அவ்விருவரும் பயணித்திருந்த புரோட்டான் எக்சோரா ரக கார் சிமெண்ட் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் புரோட்டான் எக்சோரா காரில் பயணித்த 56 வயது ஜோல் மொஹமட் மற்றும் அவரின் அக்கா 66 வயதான Latifah ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, மாநில தீயணைப்பு மீட்பு படையின் நடவடிக்கை பிரிவு தலைவர் ஹென்டேரி அர்டிமன்சயாஹ் தெரிவித்தார்.

நேற்று மாலை மணி 1.27 அளவில் அவசர அழைப்பு கிடைத்ததை அடுத்து, தீயணைப்பு வாகனங்கள், அவசர சிகிச்சை பிரிவு அம்புலன்ஸ் முதலானவை சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ஹென்டேரி அர்டிமன்சயாஹ் கூறினார்.

சம்பவ இடத்தில் எக்சோரா வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையிலும் பின் இருக்கையிலும் இருந்த அவ்விருவரின் உடல்களும் வெளியே கொண்டு வரப்பட்ட வேளையில் அவர்கள் அவ்விடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

மண்வாரி இயந்திரத்தின் உதவியுடன் சிமெண்ட் லாரி மீட்கப்பட்ட வேளையில், 43 வயது அந்த லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பியதாக ஹென்டேரி அர்டிமன்சயாஹ் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்