Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பாலத்திலிருந்து விழுந்து, நீரில் மூழ்கிய நபர்
தற்போதைய செய்திகள்

பாலத்திலிருந்து விழுந்து, நீரில் மூழ்கிய நபர்

Share:

சுக்காய், மார்ச் 19 -

கெமானான், புக்கிட் குவாங் கில் ஆடவர் ஒருவர் பாலத்திலிருந்து கீழே விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 7:22 மணியளவில் இச்சம்பவத்தை குறித்து அவ்விடத்திலிருந்த பொதுமக்கள் காவல்துறையை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்ததாக Kemaman மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent Hanyan Ramlan தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 44 வயதுடைய அந்நபர் 50 மீட்டர் உயரத்திலுள்ள அந்த பாலத்திலிருந்து கீழே விழுந்ததாகவும் பின் அவரின் உடல் ஆற்றின் கரையோரத்தில் கண்டெடுக்கப்பட்டதாகவும் Hanyan Ramlan கூறினார்.

ஜொகூரை சேர்ந்த அவ்வாடவர் பாலத்திலிருந்து குதிப்பதற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் அவ்விடத்திற்கு வந்ததாகவும் அவர் பயணித்து வந்த வண்டியை சோதனையிட்ட போது பல நோட்டுகள் கண்டறியப்பட்டதாகவும் ஹன்யா ராம்லான் தெளிவுப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட அந்நபர் குடும்ப பிரச்னையில் மனவுளைச்சலை எதிர்கொண்டிருப்பதாகவும் இது ஒரு தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்