May 22, 2026
Thisaigal NewsYouTube
பிரதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல்
தற்போதைய செய்திகள்

பிரதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல்

Share:

நாட்டின் நுழைவாயில்களில் குறிப்பாக விமான நிலையங்களில் குடிநுழைவு முகப்பிடங்களில் கூட்ட நெரிசல் தொடர்ந்து நிலவி வருவது குறித்து குடிநுழைவுத்துறையினரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடிந்து கொண்டார்.

குடிநுழைவு முகப்பிடங்களில் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பது, சுற்றுப்பயணிகளின் ஆவணங்களை சரிபார்த்துக்கொடுப்பதில் தாமதம் போன்றவற்றை குடிநுழைவுத்துறை விரைந்து சரிப்படுத்திககொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

அண்மைய காலமாக நாட்டிற்கு வருகின்ற சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகத்துள்ளது. அவர்களின் எண்ணிக்கை 80 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. கூட்ட நெரிசலை சமாளிப்பதில் குடிநுழைவுத்துறையினருக்கு நெருக்கடி ஏற்பட்ட போதிலும் அதனை சமாளிப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

Related News